கனமாக இருக்கிறது/சௌவி

முகத்தில் மோதும் காற்று
கனமாக இருக்கிறது

நடத்துனர் கிழித்துக்கொடுத்த
பயணச்சீட்டு
கனமாக இருக்கிறது

வழியோரச் செடியில்
ஈரத்தோடு பூத்து நிற்கும் ரோஜாப்பூ
கனமாக இருக்கிறது

சன்னலோரச் சீட்டில்
அம்மாவின் மடியில் அமர்ந்தபடி
எனைப் பார்க்கும்
மழலையின் புன்னகை
கனமாக இருக்கிறது

பேருந்துச் சாளரத்தின் வழி
உள்நுழைந்து
கன்னம் தொட்ட மழைத்துளி
கனமாக இருக்கிறது

காற்றின் வேகத்தில்
கால்களுக்கிடையே ஓடும்
பறவையின் இறகொன்று
கனமாக இருக்கிறது

உன் மௌனம்தான்
எத்தனை கனமாயிருக்கிறது!

2 Comments on “கனமாக இருக்கிறது/சௌவி”

Comments are closed.