
குனிந்து கல் எடுத்தால்
நாய்கள்
கோபித்து சத்தம் போட்டால்
பணியாட்கள்
பிரம்பு காட்டிப் பேசினால்
மாணவர்கள்
வரம்பு மீறிப் போகின்ற
மாடுகள்
கண்ணை உருட்டும் பெற்றோரிடம்
பிள்ளைகள்
மண்ணை எடுத்தாலும் நிற்காத
நதிகள்
சினந்து கொண்டு பேசினாலும்
மருமகள்கள்
மீசை வைத்த பூசணிக்கு
திருடர்கள்
கோட்டு போட்ட வைக்கோலுக்கு
பறவைகள்
கோல் எடுத்துக் காட்டினாலும்
குரங்குகள்
எத்தனை பேர் மாட்டினாலும்
ஊழல்வாதிகள்

நல்ல கருத்துக்களை எளிய முறையில் உதாரணத்தோடு எழுதிக் கலக்குகிறீர்கள்.
என் பாராட்டுக்கள்!