அனுராதா ஜெய்ஷங்கர்/காத்திருப்பு

” அம்மா, முடியவில்லை. ரொம்பப் பசிக்கிறது, தூக்கம் வருகிறது. மதியத்தில் இருந்து இங்கேயே இருக்கிறோம். எப்போது நம் பேருந்து வந்து எப்போது போய் சேர்வது?”
மகள் புலம்பினாள்.
அப்பாவும் அம்மாவும் கையறு நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிள்ளைகளை பரிதாபமாக பார்த்தார்கள்.
” பணம் இருந்தால் பறந்து போய் இருப்போம்” என்றான் அம்மாவின் காலடியில் சுருண்டிருந்த மகன்.
அப்பா உற்சாகமாகச் சொன்னார்.
” நாம் வெளியே காத்திருக்கிறோம். பணம் இருப்பவர்கள் விமான நிலையத்தின் உள்ளே நம்மைப் போலத்தான் பசியும் தூக்கமுமாய் காத்துக் கிடக்கிறார்கள் மகனே”.
அப்பா சொன்ன செய்தி பிள்ளைகளுக்கு இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கிடப்பதற்கான சக்தியைக் கொடுத்தது.

.

11 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/காத்திருப்பு”

  1. நல்ல ஒப்பீடு. காத்திருப்பு பொது. நம் மனம் அதைப் பார்க்கும் விதம் வேறு. அருமை.

Comments are closed.