
சமீபத்தில் நடந்த கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்
1.
ஒரு கவிதை
காலையில்
எழுந்தவுடன்
தூக்கக் கலக்கம்
என்னை விட்டுப்
போவதற்குள்
ஒரு கவிதை
எழுதிப் பார்த்தேன்
சுறுசுறுப்பாய் மாறி விட்டேன்
நான் இப்போது
ஊருக்குக் கிளம்புகிறேன்
19.04.2025
2.
தீராத துயரம்
அந்தப் பெண்மணி
கண்ணீரில்
தோய்ந்திருந்தாள்
அவள் பிரச்சினை
என்றும் தீர்வே போவதில்லை
சும்மா நடிக்கிறான்
ஒற்றுமையாய் இருப்பதுபோல்
அவன் திருந்தப் போவதில்லை
3.
தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு
கவிதையை
ஏன்
எழுத முடியவில்லை
மனம் துடித்துக்
கொண்டிருக்கிறது
எதாவது எப்படியாவது
எழுத வேண்டுமென்று
செயல் படுத்துவதற்குள்
காலம் கடந்து விட்டது
ம்..
எனக்கு ஒவ்வொரு
நாளும்
தமிழ்ப் புத்தாண்டுதான்
15.4.2025
