தமிழில் : க.மோகனரங்கன்

மாலை மங்கிய பொழுதில்,
நகர மதிலருகே ஒரு காகம்
வந்து அமர்ந்தது;
தன் வசிப்பிடத்திற்கு
வந்து சேர்ந்ததைப் போல,
அது திரும்பத் திரும்பக் கரைந்தது.
தன் தறியில் அமர்ந்து நெய்து கொண்டிருந்த
சின்-சுவான் நாட்டுப் பெண்ணொருத்தி,
மெல்லிய துணியால் திரையிடப்பட்ட தன் ஜன்னல் வழியே,
யாரோ பேசுவது போல் ஒலித்த
அப் பறவையின் குரலைக்
தவிர்க்க முடியாமல் கேட்டவள்,
தனது தறிச் சட்டகத்தை நிறுத்திவிட்டு,
பிரிந்து சென்ற தன் காதலனைப்
பற்றிய நினைவில் மூழ்கிட,
தனித்து அறையில்
வீற்றிருந்தவளின் விழிகளிலிருந்து
தாரையாக வழிந்த நீர்
ஆறெனப் பெருகியோடியது.
