அழகியசிங்கர்/வைரமுத்து

சமீபத்தில்
வைரமுத்துக்கு ஞானபீட பரிசு தருவதாகக்
கூறி உள்ளார்கள்
பலர் இவரை வாழ்த்த
நேரிடையாகப் படை எடுக்கிறார்கள்
யார் யார் என்னை
ஆதரிக்கிறார்களென்று
பட்டியல் போட்டுத் தெரிவிக்கிறார் வைரமுத்து

இன்னும் பலரோ
இவருக்குப் பரிசு பெறத் தகுதியில்லை
என்று முழக்கம் போடுகிறார்கள்
கையெழுத்து வாங்கி
கடிதம் அனுப்பி உள்ளார்கள்

இருக்கட்டும்
நான் எந்தக் கட்சி என்றால்
என்னை ஒரு பொருட்டாக
யாரும்
மதித்துக் கேட்கவில்லை
என்பதால்
நான் எந்தக் கருத்தும்
கூற விரும்பவில்லை!