
எத்தனை அவதாரங்கள்
எடுப்பாய் பெண்ணே?
அடங்கிய மகளாய்
ஆரம்பித்த உன்
ஒப்பனை அடக்க மனைவியாய்
அதட்டும் மகளுக்கு
அனுசரணை தாயாய்
பேரன் பேத்தி வளர்க்கும்
செவிலியாய்
காதில் மூக்கில் இருப்பதைக்
கழட்டும் போது
உயிரிருந்தும் சவமாய்!
எத்தனை பாத்திரம் ஏற்பாய் பெண்ணே?

நன்றி மௌலி 🙏