முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /புலனப் புகைப்படம்

பவித்ராவுக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை.புதுக் கணவன் அரவிந்த்துடன் பால்கனியில் அமர்ந்து,காஃபி அருந்துவது போல ஃபோட்டோ எடுத்துக் கொண்டு , புலனத்தில் போட வேண்டும்.கூட்டுக் குடும்பத்தில் நடக்குமா? அரவிந்த் வாங்கித் தந்த பூவைக் கூட ஓரகத்தியருக்கும், நாத்தனார்களுக்கும் பங்கிட்டுத் தர வேண்டும்.
அமெரிக்காவில் வாழும் தோழி புவனா புலன வழியில் கணவனோடு ஊர் சுற்றும் புகைப்படங்கள், வீட்டில் அவனுடன் பல கோணங்களில் இருக்கும் புகைப்படங்கள் அனுப்பி வைப்பதைப் பார்த்து, மனதுக்குள் பொருமித் தீர்ப்பாள்.நாட்கள் உருண்டோடி, இதோ பவித்ரா பிள்ளை பெற்று, ஐந்து மாதக் குழந்தையுடன் வீடு வர, கொண்டாடித் தீர்த்தது உறவுக் கூட்டம்
குழந்தை வயிற்றுப் போக்கால் துன்புற, பெரிய நாத்தனார் வயிற்றில் பத்துப் போட சரியானது இரவு முழுவதும் உடம்பு முடியாத குழந்தையுடன், உறங்காமல் போராடிய பவித்ராவை, ஏஸி அறையில் உறங்கச் சொல்லி,குழந்தையைத் தங்களிடம் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள் நாத்திகளும், ஓரகத்திகளும்!
மொழி தெரியாத , உறவுகள் இல்லாத வெளி நாட்டில் கைக்குழந்தையை ஒண்டியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தோழி புவனாவுக்கு இப்போதெல்லாம் புலனத்தைப் பார்க்கக் கூட நேரமில்லை.

ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ… – விருட்சம் நாளிதழ்

2 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /புலனப் புகைப்படம்”

Ananth Ravi உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன