அ. கௌரி சங்கர் / “நாளை நமதே “

“அருண், எதற்காக வரச்சொன்னாய் ?” – காபியை துளி துளியாக குடித்துக்கொண்டு இருந்த ஹேமா கேட்டாள்.
“காரணம் இருக்கிறது hemaa – இன்றைக்கு நமக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது, ” பதில் சொன்னான்.
கையில் இருந்த கோப்பையில் இருந்த காபியை அவன் ரசித்து ருசித்து குடித்துக்கொண்டு இருந்தது ஹேமாவுக்கு அவன் அன்றைய தினத்தில் அளவு கடந்த சந்தோஷத்தில் இருப்பதாய் காட்டியது.
“ஒருவேளை சம்பள உயர்வாக இருக்குமோ; பதவி உயர்வாக இருக்கலாம். சமீபத்தில் அவன் எழுதி அனுப்பியிருந்த நாவலுக்கு பரிசு கிடைத்து இருக்கலாம். ” – ஹேமாவின் மனது பல திசைகளில் தனது சிந்தனையை அனுப்பி விடை தேடிக்கொண்டு இருந்தது.
கோப்பையில் கடைசி துளி காபியை ருசித்து முடித்தவன் பேசினான்.
“நாளை விடிகாலை நமது வீட்டிற்கு இருபது கிலோ விறகு வருகிறது. இனி நமக்கு காஸ் இல்லையென்ற கவலை அறவே கிடையாது,” சொல்லிவிட்டு இரு கைகளையும் உயரே தூக்கி சோம்பல் முறித்து கொண்டான், அருண்.

2 Comments on “அ. கௌரி சங்கர் / “நாளை நமதே “”

பூ.சுப்ரமணியன் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன