எஸ்வி வேணுகோபாலன்/மதுவந்தி

கவிதை
மதுவருந்தி
மனமருந்தி
உணர்வருந்தி
உறவருந்தி
சுவையருந்தி
நட்பருந்தி
நடப்பருந்தி
ரசிப்பருந்தி
லயிப்பருந்தி

அளவற்ற
அன்பர்களின்
தோழமைச்
சுகமருந்தி
வாழ்வருந்தி
எல்லோரையும் கொண்டாடிக் களிப்புறும்
வரமருந்தி

சிலிர்ப்புற வைத்துப்
பெருமிதம்
கொள்ள வைத்தீரே
மதுவந்தி

இயற்கை செய்த
கொடுமையென்ன
உம்
உயிரருந்தி!

One Comment on “எஸ்வி வேணுகோபாலன்/மதுவந்தி”

  1. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.அவரது இன்முகமும் பேச்சும் கண்ணிலும் கருத்திலும்.பசுமையாக இருக்கிறது.
    அஞ்சலிகள்

அனுராதா ஜெய்ஷங்கர் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன