அழகியசிங்கர்/இனிய தமிழ்ப் புத்தாண்டே வருக..

எல்லோரும் காத்துக் கொண்டிருந்தோம்
தமிழ்ப் புத்தாண்டு
வந்து நழுவிக் கொண்டிருக்கிறது
நண்பர் ஒருவரின் மறைவுச் செய்தியைக் கேட்டு
அதிர்ந்தது மனம்
இந்தப் புத்தாண்டில்
முதலில் கற்ற பாடம்
நம் கையில் நம் வாழ்க்கை
இல்லை என்பதுதான்
நேற்று சிரிப்பை உதிர்த்த நண்பர்
சிரிப்பை திரும்பவும்
எடுத்துக்கொள்ள மறந்து விட்டார்
காலை நேரத்தில்
எட்டி நடையைப்
போட்டேன்
அனுமார் கோயில் வாசலில் நின்றேன்
சிறிது நேரத்தில்
கார் ஹாரன் ஒலி
கனவைக் கலைத்தது
யார் அழைத்தார்கள்
பூனைக் குட்டிகளை
ஓடி வந்து நிற்கின்றன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன