விஜயலக்ஷ்மி கண்ணன் /நீல உதடுகள்

அலமேலு அவசரமாக சாப்பாட்டு கேரியர் அடுக்கிக் கொண்டிருந்தவள், திடீர் என்று மகன் குமார் நினைவு வரவே அவன் அறையைப் போய் பார்த்தாள்.
“ஏண்டா ,இன்னும் குளிச்சு கிளம்பலை? டைம் ஆயிடுச்சு பாரு .சாப்பாடு கூட கட்டிட்டேன்” என்றவள் அவன் மேஜை மேல் இருந்த ஓவியம் வித்யாசமாக தெரிந்தது.
குமார் பத்தாவது படிக்கும் நல்ல மாணவன். நல்ல ஓவியன் கூட.நிறைய பரிசுகள் வாங்கியவன்.
“உதடு எங்கேயாவது நீலமா பாத்திருக்கியா குமார்?உதட்டு சாயம் கூட எந்த பொண்ணும் இந்த கலர் போடரதில்லே!”. என்ற அம்மாவின்
கேள்விக்கு பதில் சொன்னான் குமார்.
“அம்மா ,இந்த பொண்ணு பாம்பு கடிச்சு இறந்து போனவள்.
அதனால் தான் நெற்றியிலும் ,அது வழி மூக்கிலும் உதட்டிலும் நீல வண்ணம். விஷம் உடலில் ஏறினால் உடல் நீலம் ஆகிடும் இல்லே?
அப்படி தானே பாடம் சொல்லி தந்தாங்க.”என்றான் குமார்.
அலமேலு சமாதானமாகவில்லை. ஏற்று கொள்ள முடியவில்லை.
மாலையில் குமார் சிறந்த ஓவியத்திற்கான முதல் பரிசோடு வீடு திரும்பினான்.

அர்ஜுனன்/காதல் ஓவியம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன் /நீல உதடுகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன