மரு.ச.கந்தசாமி/வைதேகி காத்திருந்தாள்

வாசலில் கிண்கிணி என சைக்கிள் மணி ஓசை கேட்க , வைதேகி படபடப்பானாள்.
கண்கள் கடிகாரம் பார்க்க மணி8. “அம்மா நான் பள்ளிக்குச் செல்கிறேன்,” என உறக்க‌சொல்லிவிட்டு , லஞ்சை அள்ளி போட்டு, ஸ்கூல் பையுடன் துள்ளி குதித்து ஓடினாள். தெருமுனையில் விஜய் நிற்க, இருவரும் இருசக்கரம் சுழல , காலாற நடந்து பள்ளி செல்வது 3வருட பழக்கம்.
இருவர் வீட்டிலும் அரசல் புரசலாக விஷயம் தெரிந்தும் , சின்னஞ் சிறுசுகள் விளையாட்டாய் நண்பர்கள் என கண்டுக்க வில்லை.
காலம் சுழல விஜய் நகரம் சென்று கல்லூரியில் சேர , சைக்கிள் கதை கடிதம் மூலம் தொடர்ந்தது.விடுமுறைக்கு விஜய் வரும் போதெல்லாம் சைக்கிள் பயணம், சைக்கிள் மணியுடன் துளிர்ந்தது. இருமனம் ஒருசேர , வழக்கம் போல பெற்றார் படை சேர்த்து மோத, கடைசியில் சைக்கிள் காதல் கல்யாணத்தில் முடிந்தது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் விதி விளையாடியது.
விஜய் தன் நெடு நாள் கனவாய் ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் சென்றான்.
வைதேகியும் காதலன் கணவனான சந்தோஷம் ஒருபுறம் , வேலை நிமித்தம் பிரிந்த சோகம் ஒருபுறம் என தவித்து அவனை நினைத்து தினமும் சைக்கிளோடு காத்திருந்தாள்.

விஜயலக்ஷ்மி கண்ணன் /நீல உதடுகள் – விருட்சம் நாளிதழ்

.

2 Comments on “மரு.ச.கந்தசாமி/வைதேகி காத்திருந்தாள்”

சுஶ்ரீ உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன