
அம்மா நீயே தெய்வம்.
அம்மாவை முழுமையாக நம்பு.
ஆண்டவனுக்கு
மேல் அம்மா.
ஆயிரம் உறவிருந்தாலும்
அம்மாவிற்கு ஈடில்லை.
ஆசையாய் உணவு ஊட்டுவாள்.
இனிமையாக
பேசுவாள்.
இல்லை என்ற ஒரு நாளும் சொல்லமாட்டாள்.
ஈரேழு புவனமும்
துதிக்கப்படுபவள்.
ஈகை குணம் நிறைந்தவள்.
உண்மையான நல்ல உள்ளம்
கொண்டவள்.
ஊமையாக இருந்து கோபத்தை
பொறுத்துக்
கொள்வாள்.
என்றென்றும்
இனியவள் அம்மா.
ஏணி போல் நம்மை மேலே ற்றி
விடுவாள்.
ஐயத்தைப் போக்கு வாள்.
ஒற்றுமையைக் கற்றுத் தருவாள். ஓங்கி நிற்பவள்
எந்த உலகிலும். ஔடதம் அம்மாதான்.
அம்மா, தாயே ‘
அன்னையே.
கருணைக்கடலே
உனக்கு அநேக
கோடி நமஸ்காரம்.
