அழகியசிங்கர்/மதுவந்தி

இந்தக் கவிதை அரங்கத்திற்கு
முன்னதாகவே
அவர் வந்து விட்டார்

அவர் கடைசியாக
எழுதிய கவிதையை
வாசிக்க உள்ளார்

அன்று
வசந்த மலர் சூம்
கூட்டத்தில்
கலந்து கொண்டார்

பின்
ஓய்வுபெற அறைக்குச்
சென்றார்
அப்போதுதான்
கவிதை எழுதினார்

காலை நடைபயிற்சி
செய்தபின்
இறந்து விட்டார்
அவர் விரும்பவில்லை மரணத்தை

இதோ
கவிதைப் படிக்கக்
காத்துக் கொண்டிருக்கிறார்

One Comment on “அழகியசிங்கர்/மதுவந்தி”

indra ramanathan உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன