மரு.ச.கந்தசாமி/தோகை இள மயில்

வேலவன் பண்ணபுரத்து ஜமீன் கட்டிலிடங்கா காளை. ஊரே தன் வசம் இருக்க, செல்வம் கொழிக்க கவலை இல்லா வாழ்வு. வேலவன் வாரம் ஒரு முறை காட்டுக்குள் தன் குதிரையில் சென்று மான் வேட்டை ஆடுவது பிடித்த விளையாட்டு .பண்ணபுரம் எல்லையில் தொடங்கும் பச்சை மலையில், பெயருக்கு ஏற்றப் போல எங்கும் பச்சை பசேல் என்று மரங்கள். அங்கு வசிக்காத பறவைகள் மிருகங்களே இல்லை.அன்று அதிகாலையில் பச்சை மலையில் குதிரையில் ஏறி வேட்டையை தொடங்கினான்.உச்சி வெயில் உரைக்க எவ்வளவு தூரம் தேடியும் மான் கண்ணில் படவில்லை. எனவே சோர்ந்து கையில் இருந்த வேலை எடுத்துக் கொண்டு நடந்து காட்டுக்குள் மானைத் தேடலானான். பசி மயக்கத்தில் ஒரு மர நிழலில் ஒதுங்க, அங்கே திடீரெனச் சர சரவெனச் சத்தம் கேட்க, வேலவன் உஷாராகி வேலை எடுத்து ஆயத்தமானான். கூடவே தேனாய் இசைப்பாட்டு ஒன்றும் கேட்க, வேலவன் மரத்தில் ஏறிப் பார்க்க, அங்கே அவன் கண்ட காட்சி மெய்மறக்கச் செய்தது. மயிலொன்று அழகாய் தோகை விரித்தாட, அதன் அருகே ரம்பா ஊர்வசி மேனகா மூவரும் கலந்தார் போலத் தேவதைபோல் பெண்ணொருத்தி பாடிக்கொண்டிருந்தாள். வேலவனோ ஆஹா இவளே நான் தேடிய மானோ? என் தேவதையே! என வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்தான்.

One Comment on “மரு.ச.கந்தசாமி/தோகை இள மயில்”

Comments are closed.