ஹரணி/கனவு எதுவும் வேண்டாம்


०००
(1)
எண்ணம் எப்போதும் நலமுற வேண்டும்
ஏற்றம் எதிலும் எட்டிட வேண்டும்
மாற்றம் கண்டு மதித்திட வேண்டும்
கனவு எதுவும் வேண்டாம்.
(2)
அரும்பு மலரப் பூக்கும் அழகே
நதியில் வெள்ளம் பார்க்க அழகே
நல்லவர் பேச்சுக் கேட்க அழகே
கனவு எதுவும் வேண்டாம்.
(3)
உயரம் செல்ல ஊக்கம் கொள்க
வறுமை வரினும் கலக்கம் களைக
திறமை வளர்க்க தினமும் முயல்க
கனவு எதுவும் வேண்டாம்.
(4)
வாடும் உள்ளம் தேடி உதவு
தேடும் பொருளைத் தெளிந்து உணர்க
கூடும் உறவில் குற்றம் விலக்கு
கனவு எதுவும் வேண்டாம்.
(5)
நாடும் வீடும் ஒன்றே நினை
நல்லது நடக்க நாளும் செய்
சோம்பல் ஒதுக்கி உழைப்பு கூட்டுக
கனவு எதுவும் வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன