
இரவு பிடிக்கவில்லை
பகல் பிடிக்கவில்லை
மழை பிடிக்கவில்லை
வெய்யில் பிடிக்கவில்லை
உறவு பிடிக்கவில்லை
பகை பிடிக்கவில்லை
புசித்தல் பிடிக்கவில்லை
பசித்தல் பிடிக்கவில்லை
இரணியனை போல்
இறைவனிடம் வரம் கேள்
இதுவும் வேண்டாம்
அதுவும் வேண்டாம் என்று
சிரித்தார் டாக்டர்.
இறைவனை பிடிக்கவில்லை
இரணியனை பிடிக்கவில்லை
என்றான்
அவனை அழைத்து வந்தவரிடம்
அவன் ஆசைப்பட்ட பெண்ணை
திருமணம் செய்து வைக்கவும்
என்று மருந்து சீட்டில் எழுதி
நீட்டினார் டாக்டர
