
பாசம் பாஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
எசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தங்கருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்
விளக்கம்:
‘அருமையான அணிகலன்களை அணிக்க தோழியே இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும்போது ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது தான் கொண்ட பாசம் அளவிடற் கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய் என்கின்றனர் தோழியர். உறங்குபவள் எழுந்து. தோழி யரே சிச்சி இது என்ன பேச்சு எதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது?’ என்றாள்.
அவளுக்கு பதிலளித்த தோழியர், ‘கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளை கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முடியசிக்கின்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பேதரிசனம் தர வந்து கொண்டிரு க்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன். திருச்சிற்றமம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நமமை கேடி வருபவன் மீது நாம் எவ்வளவு துாரம் பாசம வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக’ என்றனர்.
மார்கழி வழிபாடு/திருவெம்பாவை – பாடல் 1 – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
