புத்தகக் கண்காட்சி முஸ்தீபுகள்/வாசுதேவன்

,ஆடம்பர மாநாடுகளை நடத்துகிறவர்களுக்கு போர்ச்சீகீஸ் எழுத்தாளர் ஜொஸே ஸரமாகோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

சரமாகோ 30 வயதில் எழுதத்தொடங்கினாலும் அவர் பெயர் அவர் வாழ்ந்த நகரத்தின் மணிக்கூண்டை தாண்டவில்லை…

அவர் நாட்டிலே அவர் யார் எனத் தெரியாது…இந்தப்போக்கு 30 வருடங்கள் நீடித்தது….

அவருடைய 60 வது வயதில், Baltasar and Bilimunda என்ற நாவலை ஒரு மொழிபெயர்ப்பாளர் தற்செயலாக வாசித்து 1988-ம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அடுத்த பத்தாவது வருடம் 1998-இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது…சந்தை,பொருளாதார விதிகள் கலைக்கு பொருந்தாது….

அது பக்கத்தின் எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது கால வரையறையாகவும் இருக்கலாம்…

கலை என்பது நாரத கானா சபையில் பாடும் கோஷ்டி கானம் அல்ல…இலக்கு நோக்கி எழுதுவதெல்லாம் இலக்கியம் அல்ல….

தமிழ்நாட்டில் டிசம்பர்/ஜனவரியில் கர்நாடக சங்கீத கச்சேரிகளும் புத்தகக்கண்காட்சியோடு நடக்கிறது..சிலரின் எழுத்துகள் சங்கீத வித்துவான்களின் பாவனையோடு ஒத்துப்போகிறது…

பி.கு: இதை சில வருடங்களுக்கு முன் எழுதினேன். ஜொஸே ஸரமாகோவாவின் படைப்புகளைப் பற்றி எஸ்.வி.ராஜதுரையின் நூல் வெளிவருவதாக வாசித்தேன். மகிழ்ச்சி.

அதில் ” தமிழில் முதன் முறையாக ஸரமாகோவாவை அறிமுகப்படுத்துகிறார்” என்ற உரிமை கோரல் தவறானது.

90 களில் ஸரமாகோவை அதிகம் கவனப்படுத்தியது பிரம்மராஜன். அவருடைய நாவல் The Year of the Death of Ricardo Reis பற்றி பிரம்மராஜன் அபாரமாக எழுதியுள்ளார்…

இதைப்பற்றி விரிவான மதிப்புரையும் நான் எழுதியுள்ளேன். இதைத்தவிர அவரின் அறியப்படாதவர்களின் தீவு ஆனந்த்தின் மொழிபெயர்ப்பில் மனோன்மணியின் புது எழுத்து இதழில் வந்தது.

எஸ்.சங்கரநாராயணன் மொழிபெயர்ப்பில் “பார்வையைத் தொலைத்தவர்கள்” நாவல் பாரதி புத்தகாலயமும் வெளியிட்டுள்ளது.