ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 40/அழகியசிங்கர்

02.01.2022

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  புத்தகக் காட்சி தள்ளிப் போயிற்றே?
அழகியசிங்கர் : ஆமாம்.  ஒரு விதத்தில் நல்லதுதான்.
ஜெகன் :  எனக்குக் கூட தொற்றைப் பற்றி பயம் இருந்துகொண்டே இருந்தது.
மோகினி :  நீங்கள் பயந்து விட்டீர்களா? 
அழகியசிங்கர் : ஆமாம். மேலும் புத்தகக் காட்சிக்கு வந்து விருட்சம் ஸ்டாஙூல் புத்தகங்கள் வாங்குவார்களா என்ற சந்தேகம் இருந்தது. 
மோகினி : ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்.
அழகியசிங்கர் : இப்பப் பரவப் போகிற கொரானால்தான் காரணம்.
ஜெகன் :  நீங்கள் அதிகமாகப் புத்தகம் கொண்டு வர வில்லையே?
அழகியசிங்கர்:  அது இன்னொரு காரணம்.
ஜெகன் : நீங்கள் அதிகமாகப் புத்தகங்கள் கொண்டு வந்தாலும்,  அதை வாங்க வருவது குறைவான பேர்கள்தான் இருப்பார்கள்.
அழகியசிங்கர் : புத்தக வெளியீடு வாழ்வாதாரமாக இருப்பவர்களுக்கு செம்ம அதிர்ச்சியாக இருக்கும். 
மோகினி :  ஆமாம்.
ஜெகன் :    இனிமேல் புத்தகக் காட்சிகளைப் பழையபடி நடத்த முடியுமா என்று தெரியவில்லை.
மோகினி :  உண்மைதான்.
அழகியசிங்கர் :நான் இதுவரை 7 புத்தகங்களை அச்சடித்துள்ளேன். 
ஜெகன் : அது போதாதா?
அழகியசிங்கர் :ஆமாம். ஒரு பதிப்பாளர் என்னிடம் பேசினார் அவர் 100 புத்தகங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்.  ஆடிப்போயிட்டேன்.
 மோகினி :  கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறார்கள்.
அழகியசிங்கர் : ஆமாம்.  ஆனால் என்னைப் போல் சாதாரண பதிப்பாளருக்கு ஒரு பயனும் கிட்டாது. 
மோகினி :  நான் பேசப் பேச நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜெகன்: இதை இரவு 11 மணிக்குப் பதிவு செய்கிறோம்.
அழகியசிங்கர்.  ஆமாம்.  நல்ல இரவு.  காலையில்தான் இதைப் பதிவிடப்போகிறேன்.
                                                                                                           எழுதியது இரவு 10.51 

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 40/அழகியசிங்கர்”

Comments are closed.