என்னானது??/அதிரன்

துளிகள் சேர்ந்து
கடலானது…..
கடலில் சேர்ந்த துளி
என்னானது ??

மேகங்கள் கரைந்து
மழையானது
மழையில் கரைந்த
மேகம் என்னானது ??

ஒளிகள் சேர்ந்து
ஜோதியானது
ஜோதியில் கலந்த ஒளி
என்னானது ??

ஓசைகள் கலந்து
இசையானது
இசையில் கலந்த
ஓசை என்னானது??

அவனில் கலந்த
நான் அவனானது
நானில் கலந்த
அவன் என்னானது ??