
இலையுதிர் காலம் மெல்ல வருகிறது
காடுகள் பெருங்குரலெடுத்து அலறுகிறது
குறுஞ்செடிகள் எள்ளி நகையாடுகிறது
சுகங்களைத் தேடி அலைகிறான்
மொய்த்துக் கிடக்கின்றன
வெளியெங்கும்
புழுக்கள்
நேசிப்பது
சுவாசிப்பது
ஜீவிப்பது
உதடுகள் ஒத்தடம் கொடுக்கும்
சத்தங்கள் துள்ளித் தெறிக்கும்
சக்கரைப்பாகு உடல்களை
மெதுவாய்க் கரைக்கும்
இதழ்கள் கள்ளிப் பழங்கள்
இடையில் பிதுங்கும் கனிகள்
நான் தேவதையைக் கண்டேன்
அழகு துள்ளுகிறது
அள்ளிக் கொள்ளட்டுமா?
அப்படியே நெஞ்சுள்
பதுக்கிக் கொள்ளட்டுமா?
உன்னோடு பேச ஆரம்பித்தேன்
கவிதைகள் பூக்கின்றன
உன் இதயத்தில் சூட்டவா?
என் இதயத்துள் என்ன செய்கிறாய்?
கனவுகள் என்னை பிறாண்டுகின்றன
ஒரே பயமாயிருக்கிறது
உதடுகள் காய்ந்து கிடக்கின்றன
ஈரத்தைச் சிறிது ஊற்றிவிடு
உடலே குளிரட்டும்
மனசுகள் பரிமாற்றத்தில் களி கொள்கின்றன
அன்பின் உரையாடல்கள் தெய்வீகமானது
வாழ்க்கை என்றும் இனிமையானது
இதயத்தைக் கேள்
இதயத்தின் நீங்கா வலி
இதயம் அறியாதது எதுவுமில்லை.
🦀
