
மறுகித் தவிக்கும் மனதை கட்டிப்போட என்ன வழி
அதனிடமே கேட்டுவிட்டேன்
துன்பத்தில் மிதக்கும் மேகத்திடம் தூக்கியெறி என்றது
கருமுகிலோ ஓசையற்று உதறித்தள்ளி விட்டது
ஒரு சொட்டு மழையாவதற்கும்
தகுதியற்ற உயிரியா நீ?
நினைவுகளை கொன்றொழி என்றால் கேட்கிறாயா
அதன் கூட்டுத்தொகுதிதான்
நான் என்கிறாய்
இந்த கல்லைப் போல
கோடி ஆண்டுகள் கிட என்று
சபிக்கப்பட்ட உயிரின் மீது
சாபத்தின் சின்னமாய் பட படத்துக் கொண்டிருப்பது எது
மணலில் நீந்தும் மீன்களை
படைத்து விட்டு அனாதையாய்
விட்டு விட்டு வந்த
அதே பட்டாம் பூச்சி தானே?

மிக்க நன்றி