பளிச் கவிதைகள்/- பாலசாண்டில்யன்

காணாமல் போன முகவரியை
காட்டுக்குள் தேடுகிறது பறவை
காடுகள் மேடுகள் ஆனது அறியாமல் …

சீரியல் பாத்திரங்களின் சோகம்
சகிக்க முடியாது அழுகிறாள்
சீக்காளி கணவன் அதிர்ச்சியில்

இரவு ஏன் விடிந்தது என்று
வருத்தப்பட்டான் தொடர்ந்து
கார் ஓட்டும் கிருஷ்ணன்

மியூட் போட்ட டிவி
குறையாத சத்தம் சண்டை
ரிமோட்டை காணவில்லை நிறுத்த

சுவற்றில் தினம்தொடர்ந்த
எறும்புகளின் ஊர்வலம் நின்றது
நாம் கேட்ட மழை வந்தபிறகு

அங்கே திறக்கப்பட்டது
இங்கே ஓடியது நீர்
காணவில்லை மணல் லாரிகள்