சொடுக்குக் கதைகள்/உமாபாலு

1.இரண்டு நாட்களாக தேடியும் காணாமல் போன உபரி
செல் போன் கிடைக்காத நிலையில் வேலைக்காரியிடம்
சாதாரணமாக எங்காவது எடுத்து வைத்தாளா என்று கேட்டு
விட்டு பிறகு பீரோவில் புடவைகளுக்கு இடையில்
கண்டெடுத்த போது குற்ற உணர்வு தலை தூக்கியது.


  1. அன்று புதுப்புடவை உடுத்தி உற்சாகமாக அலுவலகம்
    சென்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது
    கூட வேலை பார்க்கும் இரு பெண்களும் விடுப்பில்
    சென்றிருந்ததால்.

3.
எப்போதும் செல் போனில் விளையாடும் மகன்
அன்று பேட் வைத்துக்கொண்டு விளையாடுவதை
ஆச்சரியமாகப் பார்த்த படியே அருகில் சென்றதும்
தெரிந்தது அது கொசு பேட் என்பது.

4.
வங்கிக் கணக்கில் ஐயாயிரம் ரூபாய் மகன் தன்னிடம்
சொல்லாமல் ஏடிஎம்மில் எடுத்ததற்காக
கோபத்தில் இருந்த முதியவர் மாலை அவன
அவருக்காக15000 ரூபாயில் கட்டிலும்
மெத்தையும் வாங்கி வந்ததும் நெகிழ்ந்து வெட்கினார்.

5.
வழக்கமாக அந்த பூனையை துறத்தும் அம்மா
அதற்கு அன்று அன்புடன் பால் வைக்கக் காரணம்
சின்ன எலி என்று அறிகையில் மனம் வலித்தது.