இது ஆரோக்கியமான நிகழ்வு/ஜெயதேவன்

இந்த ஆண்டு நூலகத்துறை வாங்க இருக்கின்ற மாதாந்திர
இதழ்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
மிக்க கவனமாக பாரபச்சமின்றி இந்த ஆண்டு நூலகத்துறை இதழ்களை வாங்குவது இந்த ஆட்சியின் நல்ல நோக்கங்களில்
ஓன்று…
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களுக்கு இடையே நண்பர் சுப்ரபாரதி மணியன் சார்Kanavu Subrabharathimanian Tirupur நடத்தும் * கனவு காலாண்டிதழும்,, அழகிய சிங்கர்Chandramouli Azhagiyasingar நடத்தும் விருட்சம் இதழும் இடம் பெற்றிருப்பது மகிழ்வான செய்தி
அதே போல 10 ஆண்டுகளாக
கைப்பொருள் இழப்பில் ஐயா இரா.முத்தையாவால் நடத்தப்படும காக்கைச் சிறகினிலKaakkai Cirakinile இதழ் முதன் முறையாக வாங்கப்பட இருக்கிறது
இந்திய கம்யூ.இதழான தாமரை இதழ் எப்போதாவது வாங்கப்படும். இந்த ஆண்டு மார்க்ஸிஸ்ட் கட்சி சார்பான இதழான செம்மலருக்கு உத்தரவு கிடைக்க இருக்கிறது.
உயிர் எழுத்து மீண்டும் வாங்கப்படுகிறது
ஜெ ஆட்சிக்கு வந்தால் மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மையை நிறுத்திவிடுவார்கள். காலச்சுவடு வாங்கப்படும்…..கலைஞர் வந்தால் காலச்சுவடு வராது…உயிர்மை வரும் .இந்த முறை பாரபட்சமற்ற முறையில் இரண்டையும்
வாங்க உத்தரவு வந்துள்ளது.