தனிமையின் சங்கீதம்/வசந்ததீபன்

என் உலகத்தில் இருக்கிறேன்
நதிகள் இல்லை
வனங்கள் இல்லை
ஆழியில்லை
பறவைகள் பறக்கவில்லை
மலர்கள் வாசமில்லை
மழை புயல் பூகம்பம் ஏதும் வரவில்லை
சிறிய மேஜை என்னோட தோழமை
மஞ்சள் வண்ண நெகிழி இருக்கை
என்னை ஆறுதல் படுத்துகிறது
கனவுகள் தின்று தின்று
காலம் கழிகிறது
கைபேசியோடு
எனது மெளனத் தொடல்
உரையாடல்
உலர்ந்த மனதின் கனிகளை
எனக்கு அப்பால்
விநியோகிக்கிறேன்
அதைக் கொள்பவர்கள்
சலனமற்று இருக்கிறார்கள்
விலையுள்ள கனிகள் இதயங்களில்
விருட்சமாய் எழும் என்பது
என்னுள்
நீண்ட பயணத்தின்
தீராத பாடலாயிருக்கிறது.

🦀