ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 13

09.10.2021

அழகியசிங்கர்


ஜெகனும் மோகினியும் (அழகியசிங்கரைப் பார்த்து) : வணக்கம்.

அழகியசிங்கர் : வணக்கம்.

ஜெகன் : உங்களால் முடியாதது எது?

அழகியசிங்கர் : புத்தகம் படிக்காமல் இருப்பது

ஜெகன் : உங்களால் முடிந்தது

அழகியசிங்கர் : புத்தகம் படிப்பது

மோஹினி :  இன்றைய கதைஞர்கள் கூட்டம் எப்படி நடந்தது?

அழகியசிங்கர்: சிறப்பாக இருந்தது.  ஒன்று சிட்டியின் கூட்டம்.  இன்னொன்று சீதா ரவி அவர்களின் கூட்டம்.

ஜெகன் : மொத்தம் எத்தனை பேர்கள் பேசினார்கள்.

அழகியசிங்கர் : எட்டு பேர்கள் பேசினார்கள்.

மோஹினி : கதைகளைப் படித்து அதுகுறித்துப் பேச வேண்டுமில்லையா?

அழகியசிங்கர் : ஆமாம். ஆனால் ஆறு நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.

ஜெகன் : ஆனால் உங்கள் கூட்டம் தவிர்க்க முடியாமல் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்து விடுகிறது.

அழகியசிங்கர் : ஆமாம்.

மோஹிணி : உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?

அழகியசிங்கர் : எல்லோரும் திருப்தியாகப் பேசுகிறார்கள். 

ஜெகன் : இதுவரை 33 எழுத்தாளர்களைக் குறித்துப் பேசி விட்டீர்கள் போலிருக்கிறதே

அழகியசிங்கர் : ஆமாம்.. எல்லோரையும் கதைகளைப் படிக்க வைக்கிறேன்.  அதன் மூலம் ரசனையை ஏற்படுத்துகிறேன்.

மோஹினி : கதைகளைப் படிப்பது என்பது நல்ல அனுபவம்

ஜெகன் : ஆமாம். 

அழகியசிங்கர் : ஒவ்வொரு எழுத்தாளரின் மொத்தம் எட்டுக் கதைகளைப் படித்துவிடுவேன்.

மோஹினி : இப்படி படித்தால்தான் உண்டு.

அழகியசிங்கர் : இன்னும் படிக்க வேண்டிய கதைகள் ஆதிகமாக இருக்கின்றன.

ஜெகன் : சிட்டி கொஞ்சமாக கதைகள்  எழுதியிருந்தாலும் அவர் கதைகள் வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. 

அழகியசிங்கர் : கதைகளைப் படித்துச் சொல்பவர்கள் எப்படிச் சொல்லப் போகிறார்கள் என்ற திகைப்பு இருந்தது.

மோஹினி : நாளை நாம் சந்திப்போம்.

அழகியசிங்கர் : ஆமாம்.