
நேரம் கிடைக்கும்போது
என் கவிதையைப் படியுங்கள்
நான்
தமிழ்ப்புத்தாண்டு
பிறந்ததற்காக ஸ்பெஷலாக எதுவும்
எழுதவில்லை
இன்று லீவு என்பதால்
தெருவெல்லாம் காலியாக இருந்தது
ஹனுமார் கோயில் சென்றேன்
பழங்களால் அலங்காரம்
செய்திருந்தார்கள்
ஏனோ கூட்டம் குறைவு
கோவிலில்
வெண்பொங்கல் அதிகமாகக்
கிடைத்தது
ஆனால் சூடு குறைவாக
இருந்தது
நீங்கள் ஏன்
என் கவிதையைப் படிப்பதில்லை
அதில் என்ன இருக்கிறது
என்கிறீர்களா
அது சரி எதிலும் ஒன்றுமில்லை

கவிதை ஆனாலும், சூடு குறைவான வெண்பொங்கல் ஆனாலும் இரண்டும் ஒன்றுதான், நாக்கில் உறைக்காமல் போனால்!
அதற்காகக் கவிதை எழுதுவதை நிறுத்தி விட முடியுமா? வெண்பொங்கல் செய்யாமல் இருக்க முடியுமா?