‘ முற்பகல் செய்யின் ‘/ரேவதி பாலு

” நம்மள சுத்தி நடக்கிற நிறைய விஷயங்கள் நமக்கு புரியலன்னு அடிக்கடி சொல்வியே . வா! இந்தப் பெரியவரோட ஆன்மிக சொற்பொழிவு போய்க் கேட்கலாம் ”

நான் சுந்தரை இழுத்துக்கொண்டு போனேன்.

பெரியவர் சாந்தமாக சிரித்த முகத்துடன் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
” மனிதப்பிறவி என்பதே நாம் முன் ஜென்மத்தில் செய்த கர்மாக்களை அனுபவித்து தீர்ப்பதற்கு தான் ” என்று விவரமாக விளக்கிக் கொண்டிருந்தார்.


” ஏன் குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் இலைகளில் இருந்து ஒரு மனிதன் பொறுக்கி சாப்பிடற நிலைமைக்கு ஆளாகிறான்? “


கூட்டத்தில் இருந்த ஒருவரின் கேள்விக்கு “போன ஜென்மங்களில் அவன் அலட்சியமாக வீசி எறிந்த சாப்பாட்டைத் தான் இப்போ தேடி எடுத்து உண்கிறான்” என்றார் வருத்தத்துடன்.

அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை சுந்தரை சுட, தூக்கிவாரிப்போட்டது.

“வாழ்க்கை குறித்த எந்த ஆன்மீக விளக்கத்தையும்கேட்க எனக்கு தைரியம் இல்லை.
ஆண்டவனே என்னை நாத்திகனாகவே இருக்க விடு ” கண்களில் நீர் மல்க வேண்டிக்கொண்டான்.