
ஒரு கண் சற்றே மூடி
ஒரு கண் திறந்திருக்க
ஒற்றை பல் வரிசையுடன் சிரித்து
பரந்த நெற்றி பார்வையை
சுண்டி இழுக்க
விரிந்த கருங்கூந்தல்
காற்றில் அசைய வாழ்வின்
இக்கணம் தொலைத்து
எங்கு தேடுகிறாய் மகிழ்ச்சியை
என பூத்த புது பொலிவுடன் வினவும்
இளம் பெண்ணே
யாரடி நீ,
தூரிகை வரைந்த ஓவிய
காரிகையே
காற்றில் சாந்தியுடன்
சந்தோஷ அலைகளை
கரைத்துச் செல்லும்
மாயத்தை சொல்லி
செல்வாயோ பேரழகே ……🌹

கவிதையும் ஓவியமும் கைகோர்ப்பு வெகு சிறப்பு வாழ்த்துகள். இலத்தூர் கி. சங்கரநாராயணன் உதவிப் பொது மேலாளர் ( ஓய்வு) பாரத ஸ்டேட் வங்கி