
இந்தியாவிலிருந்து பல தத்துவ மேதைகள் மேற்கில் தாக்கம் செலுத்தினார்கள். மகரிஷி,ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஜேகே முக்கியமானவர். தனித்துவமானவர். நிறுவனம்/சீடர்களை உதறித்தள்ளியவர். பட்டங்கள்/அரியணைகளை உதாசீதனப்படுத்தியவர்.(யு.ஜி-ம் இவரைப்போல் வாழ்ந்தார்).. அன்னிபெசண்ட் அம்மையார் அவரை தியாசிஃபெகல் சொளசைட்டியின் தலைவராக நியமிக்க முயற்சி செய்தபோது கறாராக மறுத்தவர். இந்திய அத்வைதம்/பவுத்த சாரங்களை அவருடைய சிந்தனைக்கீற்றில் அவதானிக்க முடியும்.. அவர் பிரசங்கத்தை கேட்டவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் இதனால் Elite Philosopher என்ற விமர்சனமும் அவர் மேல் உண்டு. எவ்வாறாயினும் அவருடைய முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. இடையில் அவருடைய அந்தரங்கத்தை கிளறி ரோசா லிண்ட் என்ற பெண்மணிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தினார்கள். பிரிட்டிஷ் எழுத்தாளரும் தத்துவ அறிஞருமான அல்டஸ் ஹக்ஸ்லிக்கு (Aldous Huxley) இந்த விடயம் தெரியும். ஆனால் ஜேகே வின் அந்தரங்கத்தில் நுழைய மறுத்துவிட்டார்.(அவருடைய ரகசிய காதல் வாழ்க்கை உண்மைதான்.)
இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பரும் அவர் அமைச்சரவையில் இருந்தவருமான பபுல் ஜெயக்கர் மற்றும் அவருடைய இளைய சகோதரி நந்தினியும் ஜேகேவுக்கு நெருக்கமானவர்கள். ஜேகேவின் சுயசரிதையை எழுதியவர். அவசரகால அடக்குமுறையில் (Emergency) இந்திராகாந்தியோடு பபுல் ஜெயக்கருக்கும் பங்குண்டு. இதைப்பற்றியெல்லாம் ஜேகே மவுனம் காத்தார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால் இதெயெல்லாம் மீறி அவருடைய பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட முடியாது.
ஜேகேவின் பல நூல்கள் வெளிவந்துள்ளன, இன்றளவிலும் மிக முக்கியமான நூல் ஜேகே அமெரிக்க அணு விஞ்ஞானி டேவிட் போம் உடன் நடத்திய அபாரமான உரையாடல். (The Ending of Time: Where Philosophy and Physics Meet—J.Krishnamurthi and David Bohm). இந்த உரையாடலை நடத்தியபோது ஜேகே இன் வயது 85. Very Stimulating and Intellectual Discussion. இதன் காணொளியை முதல் பின்னூட்டத்தில் பார்க்கலாம்….(உரையாடல் மட்டும் சப் டைட்டிலோடு கேட்கமுடியும்). இந்த நூல் தமிழில் வந்ததா எனத் தெரியவில்லை…அவசியம் தமிழுக்கு வரவேண்டிய முக்கிய நூல்…
எந்த கோட்பாடு பின்ணனி இல்லாமல் சுயமாக சிந்தித்த ஞானி. அவர் சொன்னது ( கருத்து என்பதை மறுத்தவர்) பல விஷயங்கள் இன்றும் சரியாக இருக்கிறது. கல்வியைப் பற்றி அவர் சொன்னது இன்றும் பொருந்தும். சுயமாக சிந்திக்க தூண்டியவர். எவரையும் பின்பற்றாதவர். தன்னையும் பின்பற்ற வேண்டாம் என வலியுறுத்தியவர்.
“But how can we be free to look and learn when our minds from the moment we are born to the moment we die are shaped by a particular culture in the narrow pattern of the ‘me’? For centuries we have been conditioned by nationality, caste, class, tradition, religion, language, education, literature, art, custom, convention, propaganda of all kinds, economic pressure, the food we eat, the climate we live in, our family, our friends, our experiences – every influence you can think of – and therefore our responses to every problem are conditioned.”
~ JK

காலமெனும் பெருவெள்ளம் பல இயல்களில் உன்னதம்
அடைந்தவர்களை மனித நினைவுகளிலிருந்து
அடித்துச் சென்று கொண்டே இருக்கிறது..
ஜேகே என்னும் ஆளுமையின் சிந்தனைகளைப் புரிந்து
கொள்ளும் அளவிற்கு மனித மனமும் புத்தியும் வளர்ச்சி
அடையாத நிலையில் கொஞ்சம் அவசரப்பட்டு
வந்த அவதாரம்..
அவரை நினைவு கூறும் பத்திரிகைக்கும் எழுத்தாளருக்கும்
வந்தனங்கள்..
ஆயினும் அவரைப் பற்றிய அந்தரங்கங்களுக்கும் அரசியலுக்கும்
செலவழித்த வரிகளுக்குப் பதில் அவரின் ‘போதனைகளை’ப் பற்றி
சொல்லியிருக்கலாம்..
மேலும் பாரதீய தத்துவ ஞானிகளை வரிசைப் படுத்தும் போது
கவனத்துடன் காலரீதியாகச் செய்ய வேண்டும்.. யூஜீ க்ருஷ்ணமூர்த்திக்குப்
பின் ஜேகே என்பது போல் ஒரு தகவல் மயக்கம் தருகிறது கட்டுரை..
ஆனாலும் ஜேகேவை நினைவு கூர்ந்ததற்கு வணக்கமும் நன்றியும்..