
என்பா – 98:
வேரில் பழுத்த பலாச்சுளை பத்து!
கோடைக்கால மாங்கனிக் கன்னம் இரண்டு!
ஊறித் ததும்பும் செவ்வாழை ஒன்று!
முக்கனிச்சாறை விஞ்சுமவள் முத்தம்.
என்பா – 99:
சிலபடைப்புக்கு கருத்தைப் பதிவிடுவார் சிலர்!
பல கவர்ந்தாலும் புறக்கணிப்பார் பலர்!
உள்ளம் பாராட்டும்! உதடுகள் தடுத்துவிடும்!
வாசகம் இதிலும் வேஷம்!
என்பா – 100:
அழகியசிங்கருக்கு “அகத்தியசிங்கர்” பட்டம்!
முனிவரைப்போல் கோபம் வருவதால் அல்ல!
இலக்கணமே இல்லாத என்பாவை தன்பாவென்கிறார்!
எழுதியாச்சு இதிலொரு நூறு
