இன்று ஃபிரான்ஸ் காஃப்காவின் பிறந்த நாள்/எம்.டி.முத்துகுமாரசாமி

இன்று ஃபிரான்ஸ் காஃப்காவின் பிறந்த நாள். காஃப்காவின் வாழ்க்கையை மையமாக் வைத்து போலந்து நாட்டைச் சேர்ந்த ததேயூஸ் ருஸேவிச் எழுதிய ‘பொறி’ எனும் நாடகம் சமயவேலால் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்வெளியால் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. காஃப்காவின் தந்தைக்கும் அவருக்கும் இருந்த சிக்கலான உறவை நாடகம் பிரமாதமாகச் சொல்கிறது. நாடகங்களுக்கான பீடிகையில் குறுக்கிடப்பட்ட உரையாடல் என்றொரு நீண்ட கவிதை இருக்கிறது அதில் வரும் பின் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது:
“நீங்கள் போக வேண்டாம் நான் தூங்கவில்லை
மூடிய கண்களுடன் நான் பார்க்க முடியும்
சொற்களின் எரிச்சலை இன்னும் நன்றாக எதிர்கொள்வேன்
நீங்கள் எல்லாரும் என்னைப் பற்றிக் குசுகுசுவென்று
விவாதிக்கிறீர்கள்
நேற்று எனது நாக்கு பஞ்சுக்கம்பளியாக இருந்தது
இன்று அது முற்றிலும் விறைத்துவிட்டது”

One Comment on “இன்று ஃபிரான்ஸ் காஃப்காவின் பிறந்த நாள்/எம்.டி.முத்துகுமாரசாமி”

Comments are closed.