அறிவுஜீவி சுஜாதா வாசகர்குழு/செல்லம்மாள்.என்

சுஜாதாவின் கதை சொல்லும் திறமைக்கு
கதைகள்தான் சிறியது. ஆனால் அதில் சுஜாதாவின் அத்தனை குணாதியசங்களும் அடங்கி இருக்கும். அவரின் நக்கல், நையாண்டி , திடீர் திருப்பம் எல்லாம்
இருக்கும். அப்படிப்பட்ட அவரின் ஒரு
100 வார்த்தைக் கதை தான் இது.
சுஜாதாவின் “சிறு சிறு கதைகள் “
புத்தகத்தில் இருந்து.

==================================
இனி அவரின் கதை;–

ஆறு மாதமாயிற்று அவளைப் பார்த்து . ஏன் கூப்பிடவில்லை ?
தயக்கம் , வேலைப் பளு , எதையும் காரணம் சொல்ல முடியவில்லை.
தினம் சந்தித்து அரை மணிநேரம்
பேசினால்தான் காதலா ? நினைவுகளை செயற்கையாகப் புதிப்பித்துக் கொள்ள அவசியம் இல்லை. அதனால்தான் ஆறு மாதம்.

அவளை டெலிபோனில் அழைத்தேன்.

” நிஷா , பாபு பேசறேன் “

” சொல்லு , பாபு “

” வி மஸ்ட் மீட் நிஷா “

” பார்க்கலாமே , எப்ப ? “

” சாயங்காலம்.”

” வாயேன் ஆபீசுக்கு . அஞ்சு மணிக்கு
வரியா? ..காஃபி ஷாப் போகலாம் “

” வரேன் . நிஷா கோபமில்லையே “

” சேச்சே “

அவள் அலுவலகக் கட்டிடத்தை அடைந்தேன். பைக்கை பேஸ் மெண்டில் நிப்பாட்டி விட்டு அங்கிருந்தே லிஃப்டில் ஏறி அவள் அலுவலகம் இருந்த ஆறாவது மாடியின் பட்டனை அழுத்தினேன்.

லிஃப்ட் மேலே சென்றது. தானாகவே ஆறாவது மாடியில் திறந்து கொண்டது.நான் வெளியே வரவில்லை.

மறுபடி ‘ ஜி ‘யை அழுத்தினேன்.
கதவு மறுபடி மூடிக்கொண்டது. லிஃப்ட் கீழே இறங்கியது. இன்னும் ஆறு மாசம் ஆகட்டுமே என்ன அவசரம் ?

==================================

வெறும் நூறு வார்த்தைகளில் ஒரு குட்டிக்கதை. மனத்தின் சஞ்சலத்தை எவ்வளவு அழகாகக் காட்டுகிறது? திடீர் திருப்பம். அதுதான் சுஜாதா !இரண்டு வார்த்தைகளில் கூட கதை எழுதலாம் என்கிறார் அவர். அவருடைய கதை
இரு வார்த்தைகளில் இருந்தால் கூட
நமக்கு
ஒரு முழுக்கதை படித்த திருப்தி கிடைக்கும்.