கோவை எழிலன்
இலக்கிய இன்பம் 2
தேவாரப் பாடல்களும் பிரபந்தப் பாசுரங்களும் பக்தி இலக்கியமாகக் கொண்டாடப் பட்டாலும் அழகிய வருணனைகளைக் கொண்டவை.
திருக்கழுமலம் என்னும் சீர்காழியைப் பற்றிய இப்பாடலின் வருணனை இது
முதல் இரு அடிகளில் விடைக் கொடியை உடைய சிவபெருமானை நான்முகன் வாணியுடன் வழிபட்ட செய்தியைக் கூறிவிட்டு அடுத்த இரு அடிகளில் அத்தலத்தின் குளங்களில் தாமரை மலர் முகம் போலவும் செவ்வல்லிப் பூக்கள் இதழ்கள் போலவும் குவளை மலர்கள் கண்கள் போலவும் காட்சி தருகின்றன என்கிறார் சம்பந்தர்
“சேஉயரும் திண்கொடியான்
திருவடியே சரண்என்று
சிறந்த அன்பால்
நாவியலும் மங்கையொடு
நான்முகன் தான்வழிபட்ட
நலங்கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம்
முகம்காட்டச் செங்குமுதம்
வாய்கள் காட்டக்
காவியிருங் கருங்குவளை
கருநெய்தல் கண்காட்டும்
கழுமலமே”.
