
எங்க நெல்லை மண்ணில் சொக்கலால் பீடி ரொம்பவும் பிரபலம்.
சுவரெல்லாம் சொக்கலால் மயமாக இருந்தக் காலக்கட்டம் ஒன்றுண்டு.
இன்று சொக்கலால் பீடி இருக்கிறதா தெரியாது. பீடி சுற்றுவது எப்போதும் பெண்களின் சிறுதொழிலாக இருந்த து. வீட்டுவேலைகளுடன் வேலையாக
பீடி சுற்றி அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திய பெண்களின் கதைகளை நானறிவேன்.
பீடி இலை அந்த இலைக்குள் வைக்கும் தூள் இரண்டுமே சுகாதாரக்கேடுதான். “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு” என்று சிகிரெட்டுகளில் அச்சிட்டு சிகிரெட் விற்பனை செய்யலாம் என்ற மாபெரும் வியாபார உத்தியைக் கண்டுப்பிடித்துவிட்டோம். அப்படி ஒரு வாசகம் இருந்துவிட்டால்…. போதும். எல்லாம் ஒகே ஆயிடும்!
காதோரத்தில் பீடி சொருகிக்கொண்டு நடந்த ஒரு தலைமுறையை நான் பார்த்திருக்கிறேன். அதைவிட ரொம்பவும் சுவராஸ்யமானது ஒவ்வொரு டீக்கடையிலும் பீடி பற்றவைக்க தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு அனல்கயிறு.
பீடியை பற்றவைக்க யாரும் யாரிடமும் நெருப்பு தீப்பெட்டியைக் கேட்கலாம் என்பது ஆண்களின் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் எழுதாதச் சட்டம்! ஒவ்வொரு ஊரிலும் ஒரு சாய்க்கடை உண்டு. காலையில் எழுந்தவுடன் இந்த ஆண்கள் அனைவரும் அங்கே ஆஜர்1. ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டு கையில் கட்டிங் சாய் .. அவர்கள் பேசும் அரசியல் இருக்கிறதே.. உலக அரசியலை எல்லாம் பேசுவார்கள். இதில் அடிக்கடி கைகலப்பு வேறு வந்துவிடும்.. ..
பீடி உழைக்கும் வர்க்கத்தின் அடையாளமாக என்னுள் பதிந்தது இப்படித்தான்.
தோழர் ஜீவாவின் கட்டுரைகள் , (திரைப்படக் கட்டுரைகள்)
பீடி உண்டோ சகாவே வாசித்தவுடன்..
இப்படியாக( எனக்கு பத்த வைக்கத் தெரியாத) கட்டைப்பீடியிலிருந்து ஒவ்வொரு நினைவுகளும் சுருள் சுருளாக வட்டமிடுகின்றன. ! மழைக்கொட்டும் மாலையில் நனைந்துவிட்டு வந்தவுடன் “ஒரு பீடியுண்டே சகாவே’ ..! புரட்டிக்கொண்டு இருப்பது..
இனிமையானதுதான். வாழ்த்துகள் சகாவே.
(புத்தகம் குறித்து பிறிதொரு நாளில் எழுதுவேன்)

Very True
I too tasted it at Nellai