
ராதையின் கண்கள்
பேசும் மொழி ஓராயிரம்
நளினம் ஆர்வம் காத்திருப்பு மெல்லிய
புன்னகையை
நாணத்துடன் வெளிப்படுத்தும் பாங்கு
இன்னும் இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம்
முடிவற்ற பயணத்தின் துவக்கத்தை
அன்பின் துடுப்பு கொண்டு
அழைத்துச் செல்லும் பேரழகின் பெட்டகம்
இந்த ராதை.
எட்டிப் பார்த்து லட்டு தரும் கிருஷ்ணனை
திரும்பிப்
பாராமல்
நீலவண்ண கண்ணனுக்கு
மணி ஓசை எழுப்பி விளையாடும் செல்லமகள்
பார்ப்பது
என்னையும்
உன்னையும் தவிர…

