நவீன விருட்சம் நேற்றைய நிகழ்வில் வாசித்த எனது கவிதை
நாகேந்திர பாரதி
கூரை ஓலைக் குடிசை
கும்பிட ஒரு சாமி
அது போதும் அவர்களுக்கு
நாலு முழ வேட்டி
குத்தாலத் துண்டு
அது போதும் அவர்களுக்கு
வேர்க் கின்ற வேலை
வேப்ப மரக் காத்து
அது போதும் அவர்களுக்கு
ஆட்டுக் கறிக் கொழம்பு
ஆக்கி வச்ச சோறு
அது போதும் அவர்களுக்கு
கோரைப் பாய்த் தூக்கம்
கூட ஒரு துணைவி
அது போதும் அவர்களுக்கு
வாழ்க்கை ஒரு கனவு
சாவு ஒரு சடங்கு
அது போதும் அவர்களுக்கு
