ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 21

17.10.2021 – ஞாயிற்றுக்கிழமை



அழகியசிங்கர்

ஜெகன் : ராஜம் கிருஷ்ணன் நினைவுநாள் இந்த மாதம்  20ஆம் தேதி வருகிறது. 

அழகியசிங்கர் :  அவருடைய மரணம் துயரமிக்கது

ஜெகனும் :  நீங்கள் அவருடைய புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா?

அழகியசிங்கர் : இல்லை.  ஆனால் இப்போது படிக்க விரும்புகிறேன்.  அவர் கள ஆய்வு செய்து ஒவ்வொரு படைப்பையும் எழுதியிருக்கிறார்.  இப்படி கள ஆய்வு செய்வதால் அவர் எழுத்தில் என்ன கதையம்சம் இருக்கும் என்று தோன்றும்.  ஆனால் எதாவது ஒரு நாவலையோ சிறுகதையோ படித்திருக்கலாம்.  இப்போது தயராக இருக்கிறேன் படிக்க.

மோகினி :  90 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் ராஜம் கிருஷ்ணன்.  ஒரு இடத்தில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார் : “நான் தேர்வு எழுதவோ, மதிப்பெண் பெறவோ எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. சுதந்திரமான சிறகுகள் அசைய, அறிய வேண்டும் என்கிற பேரார்வத்துடன் நூல்களைப் படித்ததால் ஒவ்வொரு வரியிலும் புதைந்த பொருள் எனக்குப் புரியத் தொடங்கியபோது அடைந்த மகிழ்ச்சி இணையற்றது ஆயிற்று.

ஜெகன் :  ஒவ்வொரு மாதமும் நடத்துகிற கதைஞர்களின் கூட்டத்தில் ராஜம் கிருஷ்ணனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அழகியசிங்கர் : நிச்சயமாக.  ராஜம் கிருஷ்ணன் எழுத்துக்களைத் தேடும் பணி தொடங்கி விட்டேன்.

ஜெகன் :  இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தை மூன்றாக வைத்துக்கொள்ளலாமென்று தீர்மானம் செய்வதாகத் தோன்றுகிறது.

அழகியசிங்கர் :  ஆமாம்.  3 கதைஞர்களை எடுத்துக்கொண்டு 3 கதைகள் வீதம் மொத்தம் 9 பேர்களை வாசிக்க வைக்கலாமென்று நினைக்கிறேன்.  

மோகினி :  தனியாக நீங்கள் குறள் என்பா என்று கண்டு பிடித்து இருக்கிறீர்கள்.

அழகியசிங்கர் : குறள் வெண்பாவில் இரண்டு வரிகள் இரண்டு வரிகளிலும் ஒன்று நான்கு சொற்களைக் கொண்ட அமைப்பாகவும் இன்னொன்று 3 வரிகள் கொண்ட அமைப்பாகவும் உள்ளது. இதற்கு எந்த மோனையும் எதுகையும் கிடையாது.  இந்த முயற்சியைச் செய்து பார்க்கலாமென்று நினைத்து சில கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன்.

ஜெகன் :  நீங்கள் எழுதிய கவிதைகளை இங்குக் குறிப்பிட முடியுமா?

அழகியசிங்கர் : நிச்சயமாக.  

1. யாரென்று தெரியவில்லை

இன்னும் கூட

எப்போதோ பார்த்த ஞாபகம்


2.முன்னறிவிப்பின்றி

வந்து  விட்டார்கள் விருந்தினர்கள்

ஓட வேண்டும் கடைக்கு


மோகினி : எழுத வேண்டுமென்று நினைத்தால் அவ்வளவு சுலபமாக எழுதி விடலாமென்று நினைக்கிறேன்.


அழகியசிங்கர் : ஆமாம். இதற்குச் சிலர் எதிர்பார்கள்.

ஜெகன் : இன்றைய சொற்பொழிவு முடிந்து விட்டது.  நாளை சந்திப்போம்.


அழகியசிங்கர் : (கை கூப்பியபடியே) சந்திப்போம்.

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 21”

Comments are closed.