
அமெரிக்காவின் 1920 களை F.Scott
Fitzgerald, Jazz Era என அழைத்தார். அவருடைய நாவல் Great Gatsby கூட பிரதிபலித்தார். இசை, மது, பாலியியல் சுதந்திரம், உடை குறைப்பு என பல விஷயங்களில் மாற்றம் வந்தது. குறிப்பாக பெண் கள் மேல் இருந்த கட்டுப்பாடுகளை உடைத்தெறிக்கப்பட்டன. இதில் முன்னோடி Fitzgerald மனைவி செல்டா. அமெரிக்க இலக்கியத்தில் Fitzgerald க்கு தனியிடம் உண்டு என்றாலும் அவருடைய மறுப்பக்கம் குரூரமானது. பல விமர்சகர்கள் செல்டா எழுதிய Save me the waltz ஒரே நாவல்தான் ஆகச்சிறந்த நாவல் என்கிறார்கள். இருவரும் உல்லாசமாக வாழ்ந்தனர். ஒருகட்டத்தில் செல்டாவுக்கும் ஒரு பைலட்டுக்கும் காதல் மலர்கிறது. செல்டா விவகாரத்து கோருகிறார். Fitzgerald மறுக்கிறார். சர்ச்சை முற்றுகிறது. செல்டாவை ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி கதவை மூடுகிறார். செல்டாவுக்கு மனப்பிறழ்வு நோய் முற்றுகிறது. நோய் தீவிரத்தில்தான் அந்த ஒரு நாவலை எழுதினார். எலெக்ட்ரிக் சிகிச்சை அறையில் தீப்பிடித்து மரணமடைகிறார். விபத்தா அல்லது கொலையா எனத் தெரியாது. Fitzgerald எழுதிய Great Gatsby நாவலும் செல்டா எழுதியது என்ற கோணமும் உண்டு. வரலாற்றில் அளவில் குறைவாக எழுதியவர்கள் உண்டு. ஆர்தர் ரைம்போ, எஸ்ரா பவுண்ட் வரிசையில் செல்டாவும் குறைவாக எழுதியவர். ஒரு எழுத்தாளருக்கு மனைவியாக இருப்பது வரம் அல்ல.சாபம். அது செல்டாவுக்கும் பொருந்தும்.
