யோகி இன்றொரு சேதி/விசிறி சங்கர் 

O

திருவண்ணாமலை யோகி ஆஸ்ரமக் காவலராக தொண்ணூறுகளில் பணியாற்றியவர் திரு கண்ணன் அவர்கள். அவர் பணிக்கு வருவதற்கு வசதியாக ஆஸ்ரமம் அருகே உள்ள ஒரு எளிய இல்லத்தில் மாதம் ரூபாய் 25 வாடகை அளித்து வசித்து வந்தார்.

O

ஒருநாள் யோகி சுதாமா இல்லத்தில் இருந்து காரில் ஆஸ்ரமம் வரும் வழியில், டிரைவர் திரு ரவி அவர்களிடம் வாட்ச்மேன் கண்ணன் இல்லம் எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். ஆஸ்ரமம் அருகில் இருப்பதாக டிரைவர் ரவி தெரிவிக்க, கார் அங்கு செல்லட்டும் என்று யோகி பணித்துள்ளார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

O

கார் திடீரென்று வாட்ச்மேன் திரு கண்ணன் அவர்கள் இல்லம் சென்று நிற்க, யோகி காரிலிருந்து இறங்கி அந்த இல்லம் சென்று அமர்ந்தார். திரு கண்ணன் அவர்கள் மனைவி திருமதி லலிதா அவர்கள் ஆச்சர்யமும் அச்சமும் கொண்டு யோகியை வணங்கி நின்றார்.

O

” சாப்பிட என்ன இருக்கிறது ? லலிதா கொண்டு வருவோம் ! “

என்று யோகி கேட்டுக் கொண்டார். ” சுவாமி இன்னும் சோறு ஆக்கவில்லை” , என்று கூறி அவர் திகைத்துப் போய் நின்றுள்ளார். ” பரவாயில்லை … வீட்டில் இப்போது என்ன இருக்கிறதோ… அதை எடுத்து வருவோம் ” என்று யோகி பணித்துள்ளார்.

O

வீட்டினுள் ஒரு கிண்ணத்தில் முதல் நாள் சோறு கொஞ்சம் மீதம் இருந்தது. அதைத் தயங்கியவாறே எடுத்து வந்தார் அந்த அம்மையார். அதில் எறும்புகள் வேறு ஊர்ந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அந்த எறும்புகளை அப்புறப்படுத்த செய்து விட்டு, அந்த பழைய சோறை யோகி ஆசையுடன் சாப்பிடலானார்.

O

யோகி கூறினார் : ” இன்று நவம்பர் 14 ஜவஹர் லால் நேருஜி பிறந்த தினம். இந்த தினத்தில் பிச்சைக்காரனுக்கு கண்ணன் இல்லத்தில் விருந்து ” என்று சொல்லி மகிழ்ந்து உணவு அருந்தி உள்ளார்.

O

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில், தெய்வக் குழந்தை பகவான் யோகி ராம்சுரத்குமார் நிகழ்த்திய லீலை இது.

O

அன்று துவாரகா மன்னவன் ஸ்ரீ கண்ணனை சந்திக்கச் சென்ற சுதாமா ( குசேலர்) தாம் கொண்டு சென்ற எளிய அவல் உணவை கொடுக்கத் தயங்கியபோது, அதை ஆசையாக வாங்கி உண்டு

மகிழ்ந்து அனுக்கிரகம் செய்தது கண்ணனின் லீலை.

O

இன்று ” சுதாமா ” இல்லத்தில் இருந்து ” கண்ணன்” இல்லம் வந்து யோகி நிகழ்த்திய லீலை இஃது !

O

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜயகுரு ராயா

May be an image of 4 people

63Rajan Thangam and 62 others

18 Comments

4 Shares