கலாப்ரியா கவிதை

பொக்கை வாயை
வெறுமனே மென்றபடி
பழகிப் பழகி
பளபளப்பேறின சின்ன
இரும்பு உரலில்
இறந்த கால நினைவுகளின்
ஆட்டத்திற்கு
ஜதி எழுப்பிக் கொண்டு
நினைவுகளையுமே
சேர்த்துப் போட்டு
வெற்றிலை இடிக்கிறாள்
தலையாட்டி ஆச்சி
அனுபவித்து அசை போட்டுச்
சுவைத்த சாற்றை
புளிச்சென்று துப்புகிறாள்
நிகழ் காலத்தின் மீது

(மீள்)