
வீட்டுள் புகுந்து
திருட முயன்ற
திருடனை
விரட்டித் துரத்த
அவன் பின் ஓடினேன்;
தெருத் திருப்பத்தில்
ஓடி மறைந்தான்.
ஓட்டத்தை நிறுத்தித்
திரும்ப நினைத்தால்
ஓடும் போது நான்
வாலை மிதித்த
ஒற்றை நாயொன்று
குரைத்து வர
இன்னொரு திருப்பத்தைத்
தேடிக் கொண்டே
மீண்டும்
ஓடத் தொடங்கினேன்.
