
ஆற்றங்கரை ஓரம்
களிமண் எடுத்து
அழகான பிள்ளையாரை வடிவமைத்து
நல்லெண்ணெயும் திரவிய பொடியும் அரிசிமாவும்
பாலும் தெளிதேனும் பஞ்சாமிர்தமும் மஞ்சளும்
சந்தனமும் இளநீரும் பன்னீரும் விபூதியும் அபிஷேகம்
செய்து செய்து புஷ்பங்களால் அலங்காரம் செய்து
விநாயகர் அகவல் பாடி கொழுக்கட்டை
நிவேதனத்துடன் விநாயகர் வந்துவிட்டார்
