கேள்விக்காரன் கவிதை

எனக்கு கணபதி
என்ற சொல்
கணவதிதான்

பிழை என நீங்கள்
சொன்னால் எனக்கு
என்ன ஆச்சு!

என் மூன்றாம் வகுப்பு
தோழி பெயர் கணவதி
கண்க்கில அவள் புலி!

கணவதி என்ற பெயர்
கணக்குக் கடவுள் பெயரோ என
நான்
மலைத்து அதிசயித்த
பிள்ளைப் பருவம்.

கணவதி என்றொரு
பஸ் உண்டு
எங்களூரில்.

கணவதி கிழக்கே
போயிருக்கான்
இப்ப வந்துடுவான்
என்பார்
பெட்டிக்கடை
கணேச மாமா!

கிடைக்கும் கேப்பில்
கத்தரி சிகரெட் வாங்கி
கடை அழுக்கு காடா மறைவில் பதுங்கி
நின்று ரெண்டே ரெண்டு உறிஞ்சு
உறிஞ்சி முக்கால் சிகரெட்டை பஸ் ஆரன்
கேட்டு காலில் போட்டு நசுக்கி கடைப் பானை ஒரு
மடக்கு கொப்பளித்து ஒரு மடக்கு குடித்து
பஸ் ஏறத் தயார்
ஆவார் விநாயக சித்தப்பா!

பெரிய பெரிய
மூட்டை முடிச்சோடு
தென்காசி போய்
பொதிகை பிடிக்க
நாலு வயசு கணேசினியை
ஒரு கரம் பற்றி
வயிற்றுப் பிள்ளை
பாரம் தாங்கி
துதிக்கை கடவுள்
துதி செய்து
சோர்ந்து தாய் வீடு
சங்கரங்கோவில் செல்லும் வினாயக
விலாசினி!

கர்ப்பிணி பயணத்திற்கு
காசு வாங்காத கண்டக்டர் கணேசன்.!

முதிய பயணிக்கு
கணேச விலாஸ்
காப்பி கடையில்
பஸ் நிறுத்தி
சுடச்சுட காப்பி வடை
வாங்கித் தந்து
காலைப் பசியாற்றி
மகிழும் ஓட்டுனர்
கணேசன்.!

இப்படி எத்தனை எத்தனை
மானுட கணவதிகள்
நான் காணும் திசையாவும்…!

சட்டென்ற ஒலித் தேய்வில்
திண் என ஒலித்த
மத்தள பாடல்…

காக்கும் கடவுள்
கணேசனை நினை…