
கோலாகலம் கொண்டாட்டம்
பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்
களிமண்ணில் சிலை வடித்து
அருகம் புல்லில் அலங்காரம்
எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்
பலவித மலர்கள் தூவி வரவேற்பு
அப்பமுடன் அவல் பொரி
மோதகம் கொழுக்கட்டை வடை
பாயசம் சுண்டல் நைவேத்தியம்
உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்
மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்
ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்
யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்
உன்புகழ் பாடியே உய்ய வந்தோம்
கணேசா கடைக்கண் காட்டி
நலமுடன் வாழ வைப்பாய் உலகினையே

Super O super
Thank you Kannan
அருமை
வினை தீர்க்கும் விநாயகர் துதி
நல்வாழ்த்துகள்
வேண்டுவார் வேண்டும் வினை முடிந்த அன்பர்தம்
வேட்க்கையெலாம் வேழ முகத்தனை
ஈண்டு புவியிடை ஈந்திடும் நாயகன்
ஈசனுடன் யாண்டும் மடிமிசை ஆடிடும்
மைந்தாம் சதுர் கரத்தனை
தோண்டி வயிற்றனைக் கண்டு
மகிழ்வேன் தொழுதெந்தே. !!
உமது வினை தீர்க்கும் விநாயகரின்
கவிதை அருமை
வேண்டுவார் வேண்டும் வினை முடித்தன்பர் தம்
வேட்கையெல்லாம்
வேழ முகத்தனை
ஈண்டு புவியிடை ஈந்திடும் நாயகன்
ஈசனுடன் யாண்டும் மடியிசை ஆடிடும்
மைந்தாம் சதுர் கரத்தனை
தோண்டி வயிற்றனை கண்டு
மகிழ்வேன் தொழுதெந்தே!!