
என் வீட்டிற்கு
பத்தே முக்காலுக்கு
வந்தார் வினாயகர்
அவர் பின்னால் வைக்கும்
குடை கீழே விழுந்து விட்டது ரோடில்
தெரியாமல் போய் விட்டது.
வீட்டிற்கு வந்தவுடன்
பிள்ளையார்
கள்ளச் சிரிப்புடன்
என்னைப் பார்த்தார்
ஓடினேன் திரும்பவும்
குடை வாங்க..
குடையை வாங்கி
வந்த பிறகு
மனைவி பதட்டமாய் இருந்தார்
நேரம் ஆகிவிட்டதே என்று..
