
பள்ளங்களில்
தவறிவிழுந்த மழை
எழுந்து நடக்கமுடியாமல்
கிடக்கிறது சாலையில்…
கிளை விரித்துத்
தலைவணங்கித்
தூக்க முயல்கிறது
மரம்
ஊர்ந்து சென்ற
மேகமும் நடை நிறுத்தி
பள்ளத்தில் இறங்கிவிட்டன
சட்டென வந்த
வாகனத்தின்
வேகத்தில்
என் உடலெங்கும்
மேகமும்
மரக்கிளையும்

பள்ளங்களில்
தவறிவிழுந்த மழை
எழுந்து நடக்கமுடியாமல்
கிடக்கிறது சாலையில்…
கிளை விரித்துத்
தலைவணங்கித்
தூக்க முயல்கிறது
மரம்
ஊர்ந்து சென்ற
மேகமும் நடை நிறுத்தி
பள்ளத்தில் இறங்கிவிட்டன
சட்டென வந்த
வாகனத்தின்
வேகத்தில்
என் உடலெங்கும்
மேகமும்
மரக்கிளையும்